திருச்சி:

திருச்சி பாஜக பிரமுகர் விஜய்ரகு கொலையில் மதக்கலவரத்தை தூண்டி விடும் வகையில் பாஜக தலைவர்கள் டிவிட் பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசும், காவல்துறையும் இதுபோன்ற நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள உப்புப் பாறை என்ற பகுதியைச் சேர்ந்தவர் விஜய ரகு. இவர் அந்த பகுதியின் பாஜக செயலாளராக இருந்து வருகிறார்.  அங்கு மார்க்கெட்டில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்து வருகிறார்.

இவருதக்கும், அந்த பகுதியைச் சேர்ந்த மிட்டாய் பாபுவுக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று  மர்ம  கும்பல் ஒன்று விஜய ரகு சுற்றி வளைத்து வெட்டி வீசியது. இதில் விஜய்ரகு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு, மிட்டாய் பாபு என்பவரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ், மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா போன்றோர், இந்த கொலை திட்டமிட்டு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் காரணம் என்றும் குற்றச்சாட்டுக்களை கூறி மக்களிடையே துவேசத்தை தூண்டி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக எச்.ராசா பதிவிட்டிலுள்ள டிவிட்டில்,  பாஜக திருச்சி பாலக்கரை பகுதிச் செயலாளர் ரகு இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டிக்கொல்லப்பட்டு உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதுபோல முரளிதரராவ் வெளியிட்டுள்ள பதிவிலும், ஜிகாத் பயங்கரவாதிகள் விஜய்ரகுவை கொலை செய்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.

பாஜக தலைவர்கள், விஜய்ரகுவின் கொலையை இஸ்லாமியர்களோடு இணைத்து, பேசுவது, டிவிட் பதிவிடுவது போன்ற நிகழ்வுகள் தமிழக்ததில்,  பாஜக தலைமை திட்டமிட்டு மதக்கலவரத்தைச் தூண்டுகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாஜக பிரமுகர் கொலையைத் தொடர்ந்து இந்துத்துவா கும்பல்கள், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கடைகளை அடைக்கும்படி போராட்டம் நடத்தினர். பா.ஜ.க. தலைவர்களும் இந்தக் கொலை சம்பவத்தைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டனர்.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், இந்தக் கொலை மதத்தின் அடிப்படையில் நடந்த கொலையாக தெரியவில்லையென மறுப்பு தெரிவித்து உள்ளார். முன்விரோதம் காரணமாகவே,  மிட்டாய் பாபு தரப்பினர் விஜய்ரகுவை கொலை செய்துள்ளது என்றும்,  “குற்றம் செய்தது யார் என்பது தெரிந்துவிட்டது. குற்றவாளிகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

மேலும், . குற்றவாளிகள் அனைவரும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. குறைந்தது இரண்டு மதங்களை சார்ந்தவர்கள். காவல்துறை விசாரணையின் அடிப்படையில் பார்த்தால், இது மதத்தின் அடிப்படையில் நடந்த கொலையாகத் தெரியவில்லை” என்றும் விரிவாக விளக்கி உள்ளார்.

ஆனால், பாஜகவினரோ திட்டமிட்டு, இந்த கொலை இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடைபெற்றுள்ளது என்று கூறி, மக்களி டையே மததுவேசத்தை  ஏற்படுத்தி வருகின்றனர். அமைதி மாநிலமாக திகழும் தமிழகத்தில் திட்டமிட்டு பாஜக வன்முறையை தூண்ட முயற்சிப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாஜக வின் கோர முகம் . தமிழகத்தில் வெளிப்பட்டு வருகிறது… இதை தமிழக அரசும், காவல்துறையும் உடனே தடுத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.