திருச்சி:
ஸ்ரீரங்கம் கோவில் பூசாரி மற்றும் ஊழியர்களுக்கு திருச்சி திமுக  எம்எல்ஏவும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு  பண உதவி வழங்கி, அவர்களிடம் ஆசி பெற்றார்.

கொரோனா ஊரடங்கால் கோவில்களும் மூடப்பட்டுள்ளதால், அதில் பணியாற்றி வரும் கோவில் பூசாரிகள் மற்றும் ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்னர். அவர்களுக்கு அரசு மட்டுமின்றி, தன்னார்வலர்களும், அரசியல் கட்சியினரும் பொருள் மற்றும் நிதிஉதவி வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்சி மேற்கு மாவட்ட எம்எல்ஏவும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு,  திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பணியாற்றி வரும்,  160 கோயில் பாதிரியார்கள் மற்றும் 210 கோயில் தொழிலாளர்களுக்கு நிதி உதவி மற்றும் அத்தியாவசிய பொருட்களை  வழங்கினார்.
இதையடுத்து, கே.என்.நேருவுக்கு அர்ச்சகர்கள் பூசை செய்து ஆசி வழங்கினர்.
இதுகுறித்து கூறிய நேரு,  “கடவுள் அல்லது மதத்தின் பெயரில் மக்கள் திமுகவை புறக்கணிக்க முடியாது. எங்கள் கட்சியிலும் கடவுள் விசுவாசிகள் உள்ளனர். மதத்தைப் பொருட்படுத்தாமல், ஊரடங்கை  சந்திக்க போராடும் அனைவருக்கும் திமுக  உதவுகிறது என்றார்.