புதிய தமிழகம் கட்சி பிரமுகர் மகன் கொலை: திருச்சியில் பதட்டம்

திருச்சி: 

புதிய தமிழகம் கட்சி பிரமுகரின் மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் தென்னூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. புதிய தமிழக கட்சியைச் சேர்ந்த இவரின் மகன் பிரபு.  

images

நேற்று தென்னூரில் உள்ள  கோயில் அருகே, பிரபு தனது  நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.   அப்போது அங்கு வந்த மர்ம கும்பல்  பிரபுவையும் அவரது நண்பையும்  அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.  இதில் படுகாயமடைந்த இருவரும், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், பிரபு சிகிச்சை பலனின்றி  இன்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   முதல் கட்ட விசாரணையில்,  முன்விரோதம் காரணமாக இந்த கொலை டந்திருக்கலாம் என  காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரபு மரணமடைந்ததைத் தொடர்ந்து தென்னூர் பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.