ராஜ்யசபா துணைத்தலைவர் தேர்தலில் திருச்சி சிவா போட்டி..

ராஜ்யசபா (மாநிலங்களவை) துணைத்தலைவராக இருந்து வரும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.யான ஹரிவன்ஷ் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க வரும் 14 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்த பதவிக்கு ஆளும் பா.ஜ.க. கூட்டணி சார்பில் வேட்பாளராக மீண்டும் ஹரிவன்ஷ் போட்டியிடு கிறார். அவர் நேற்று மனு தாக்கல் செய்தார்.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தி.மு.க, எம்.பி.யான திருச்சி சிவா போட்டியிடுவார் என தெரிகிறது. ,திருச்சி சிவா, ராஜ்யசபா எம்.பி.யாக நான்கு முறை தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஆவார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும்.

-பா.பாரதி.