சுதந்திர தினம் : விற்பனைக்கு வந்துள்ள மூவர்ண முகக் கவசம் 

நொய்டா

நொய்டாவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண முகக் கவசம் விற்பனைக்கு வந்துள்ளது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் பல நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அதுவரை முகக் கவசம் அணிவது அவசியமாகி உள்ளது.

தங்கம், வைரம் எனப் பல வகை முகக் கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன.

வரும் 15 ஆம் தேதி நாடெங்கும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.

அதையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் மூவர்ண கொடியின் வடிவில் முகக் கவசம் விற்பனைக்கு வந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி