ஐநூறு படங்களுக்கு மேல் வெளியிட்டு சாதனை:  வெள்ளி விழா கொண்டாடும் டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம்

திரைத்துறை மீது அனைவருக்கும் ஒரு ஈர்ப்பு உண்டு. அதற்கு மிக முக்கிய காரணம்.. அத்துறையில் கிடைக்கும் புகழ்.. பிரபலம்.

ஆனால்.. நடிகர்கள், இயக்குநர்கள், இசைமப்பாளர்கள், பாடகர்கள்.. என்று பலரும் புகழ் பெற காரணமாக இருக்கும் நபர்கள் சிலர், புகழ் வெளிச்சத்தில் இருந்து தள்ளியே இருப்பார்கள். அவர்களில் முக்கியமானவர்கள், விநியோகஸ்தர்கள் தயாரிப்பார்கள்.

அப்படி தீபம் ஒளிர காரணமாக இருக்கும் எண்ணெய்போல தன்னை முன்னிறுத்தாமல் பிறர் புகழ் பெற காரணமாக இருக்கும்  தயாரிப்பு & விநியோக நிறுவனங்களில் ஒன்று டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம்.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை விநியோகம் செய்திருக்கிறது. பல படங்களை தயாரத்திருக்கிறது.

இந் நிறுவனத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, செய்தியாளர்களிடம் பேசினார் நிறுவன அதிரபர்களில் ஒருவரான ரவி:

“ஆரம்பத்தில் நானும் என் நண்பர் லத்தீப்-ம் சில நண்பர்களுடன் சேர்ந்து திரைப்படங்களை வாங்கி விநியோகம் செய்து வந்தோம். ஆண்பாவம், விடிஞ்சா கல்யாணம், எங்க ஊரு பாட்டுகாரன், உள்ளே வெளியே, உள்ளத்தை அள்ளித்தா.. இப்படி நிறைய படங்கள்.

ரவி

பிறகு,  லத்தீப்பும் நானும் இணைந்து தனியாக பொற்காலம் படத்தை விநியோகம் செய்தோம். தமிழ்நாட்டின் பெரிய (திரைப்பட விநியோக) ஏரியாவான என்.எல்.சி. பகுதியில்  படங்களை வெளியிட்டோம்.

அஜித்-கூட வாலி, வில்லன், முகவரி, ஆரம்பம்-னு நிறைய வெற்றி படங்களை விநியோகம் செய்தோம்.

விஜய் நடித்த சச்சின், திருப்பாச்சி, கத்தி, மெர்சல்…  ரஜினியின் காலா… கமல் நடித்த உன்னைபோல் ஒருவன்… விஷாலின் பாண்டியநாடு, பூஜை, ஆம்பள..

தனுஷின் அது ஒரு கனாகாலம், தேவதையைகண்டேன், கொடி, விசாரணை.

விக்ரமின் பீமா.. சிம்புவோட குத்து, சரவணா, அச்சம் என்பது மடமையடா…

சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்… விஜய்சேதுபதியோட நானும் ரவுடிதான்… ஜீவாவின் ராம்… சசிகுமாரின் சுப்ரமணியபுரம், சுந்தரபாண்டியன்..

சமுத்திரகனியின் அப்பா… விஜயகாந்த்தின் கள்ளழகர்… முரளியின் பூந்தோட்டம்.. பார்த்திபனின் வெற்ற்கொடிகட்டு, அழகி..

இப்படி கிட்டதட்ட மூன்று தலைமுறை நடிகர்களின் 550 படங்களுக்கு மேல் நாங்கள் வெளியிட்டு இருக்கோம்” என்று பட்டியலிட்டு பிரமிப்பு ஏற்படுத்திய ரவி, தாங்கள் தயாரித்த படங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார்:

“விநியோகத்துல் எங்களுக்கு கிடைச்ச வெற்றிக்கு பிறகு படத்தயாரிப்பில்  ஈடுபட்டோம். சசிகுமார் நடித்த  வெற்றிவேல் படம் எங்கள் முதல் தயாரிப்பு, அதன்பிறகு சிவலிங்கா படத்தை தயாரிச்சோம்.  மற்ற தயாரிப்பாளர்களுடன் இணைந்து விக்ரம் வேதா, அவள், லஷ்மி, தமிழ்படம் 2, அறம், ராட்சசன்-னு கடந்த இரண்டு வருடங்களா முக்கியமான பல படங்களை தயாரித்தோம்.

சௌந்தர்யா ரவீந்திரன்

தற்போது மற்ற தயாரிப்பாளர்களுடன் இணைந்து சீதக்காதி, ஆயிரா, தேவி 2, தில்லுக்கு துட்டு 2, கமல் சாரோட இணைந்து விக்ரம் நடிக்கிற படங்களை தயாரிக்கிறோம்” என்று பெருமிதத்துடன் கூறினார் ரவி.

தவிர, கால மாற்றத்துக்கு ஏற்ப டிஜிட்டல் துறையிலும் இறங்கியிருக்கிறது டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம். வீரப்பன் கதை உள்ளிட்ட  வெப் தொடர்களை தயாரித்து வருகிறார்கள்.

வெள்ளி விழா தருணத்தில் இன்னொரு மகிழ்ச்சியான விசயத்தையும் பகிர்ந்துகொண்டார் ரவி.

“என் மகள் சௌந்தர்யா ரவீந்திரன் வெளிநாட்டில் எம்.எஸ். படித்தவர். ஆனாலும் கலைத்துறையில் ஈடுபாடு கொண்டிருக்கிறார். இன்று முதல் எங்கள் டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளராக  பொறுப்பேற்கிறார்” என்றார் ரவி.

அடுத்து பேசிய  சௌந்தர்யா ரவீந்திரன், “ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறது என்பது படம் பார்த்த பிறகுதான் தெரியும். ஆனால் அதற்கு முன்பே இது நல்ல படம்.. போய்ப் பாருங்கள் என்று மக்களை திரையரங்கத்துக்குள் அனுப்புவது மீடியாதான். என் தந்தை காலத்தில் இருந்து ஆதரவளிக்கும் நீங்கள் தொடர்ந்து எனக்கும் ஆதரவளிக்க வேண்டும்” என்றார் நெகிழ்வோடு.

பெரிய பொறுப்பை ஏற்றிருக்கும் சின்னப்பெண், பெரும் பெரும் சாதனைகள் படைக்க வாழ்த்துவோம்.

 

 

Leave a Reply

Your email address will not be published.