கொல்கத்தா: மாநில அரசுக்கு எதிராக செயல்படும் கவர்னர் ஜக்தீப் தங்காரை திரும்ப பெறுங்கள் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதி உள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில்,  மத்தாவின் திரிணாமுல் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. மத்தியஅரசின் பெரும்பாலான சட்டங்களுக்கு மம்தா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதனால், பாஜக மம்தா மீது கடுமையான கோபத்தில் உள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது.

அங்கு 2021ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அரசியல் களம் அனல்பறக்கிறது. மம்தா கட்சியைச் சேர்ந்த பலரை பாஜக தன்பக்கம் இழுத்து வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது மோதல்கள் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், மாநில ஆளுநர் ஜக்தீப் தங்கார், மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாகவும், மாநில நலன்களுக்கு எதிராகவும் செயல்படுவதாக மத்தா குற்றம் சாட்டி வருகிறார். இது தொடர்பாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு,  கடிதம் எழுதி உள்ளார். அதில், கவர்னர் ஜக்தீப் தங்காரை உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.