தமிழில், ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் அறிமுகமான சுனைனா, தற்போது ‘டிரிப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் .

இந்த படம் திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகி வருகிறது . சுனைனா அதிரடி சண்டை காட்சிகளிலும் நடித்துள்ளார்.

‘டிரிப்’ படத்தில் பிரவீன், யோகிபாபு, கருணாகரன் ஆகியோரும் நடித்துள்ளனர். டென்னிஸ் இயக்கி உள்ளார்.

இந்நிலையில் சுனைனா பிறந்த நாளை முன்னிட்டு நாயுடன் முறைத்தபடி நிற்கும் அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

.