Random image

யோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு !

யோகிபாபுவுடன் ட்ரிப் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் சுனைனா. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் இந்த படத்தில் கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

த்ரில்லர் கலந்த நகைச்சுவை படமாக இந்த படம் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதயஷங்கர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார்.

படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் சிங்கிள் What a life எனும் பாடல் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடர்ந்த காட்டில் மாட்டுக்கொள்ளும் மனிதர்கள் எப்படி தப்பித்து வருகிறார்கள், சோம்பிகளிடம் எப்படி போராடுகிறார்கள் என்பதை ட்ரைலர் காட்சியில் காண்பித்துள்ளனர் படக்குழுவினர்.