முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேறியது

டில்லி

க்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேறி உள்ளது.

இஸ்லாமிய ஆண்கள் தங்கள் மனைவிக்கு ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்வதே முத்தலாக் எனப்படுகிறது. இது குரானுக்கு எதிரானது என பலரும் தெரிவித்து வந்தனர். உச்சநீதிமன்றம் இது சட்ட விரோதமானது எனக் கூறியும் தொடர்ந்து முத்தலாக் நடைபெற்று வந்தது. அதை ஒட்டி மத்திய அரசு ஒரு அவசர சட்டம் இயற்றியது.

அந்த அவசர சட்டத்தை ஒழுங்கு படுத்த அது மசோதாவாக்கப்பட்டு மாநிலங்கள் அவையில் அளிக்கப்பட்டது. மாநிலங்களவையில் செய்யப்பட்ட திருத்தங்களுடன் மக்களவையில் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மசோதா மீது சூடான விவாதம் நடந்தது. காங்கிரஸ் மற்றும் பல எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்கள் இந்த மசோதாவை கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என கூறினார்கள். ஆனால் அதை ஆளும் பாஜகவினர் ஒப்புக் கொள்ளவில்லை.

இந்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி மற்றும் அதிமுக வெளிநடப்பு செய்தது.

பலத்த வாக்குவாதங்களுக்கு இடையே இந்த முத்தலாக் தடை மசோதா நிறைவேறி உள்ளது. இனி இந்த சட்டத்துக்கு விரோதமாக ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்பவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம் என இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி