டில்லி,

ஸ்லாமியர்களின் விவாகரத்து முறையான தலாக்-குக்கு தடை விதிக்கும் வகையில் மத்திய அரசு புதிய மசோதா தயாரித்துள்ளது. இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய அமைச்ச்ர ரவிசங்கர் பிரசாத் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இஸ்லாமியர்களின்  விவாகரத்து முறையான,  ஒரே நேரத்தில் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்வ தற்கு இஸ்லாமிய பெண்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுகுறித்து பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டன. அதைத்தொடர்ந்து, இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன பெஞ்சு விசாரணை செய்து தீர்ப்பு வழங்கியது.

அதைத்தொடர்ந்து, மத்திய அரசு முத்தலாக் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் புதிய மசோதாவை உருவாக்கியது. அந்த மசோதாவை இன்று  பாராளுமன்ற மக்களவையில் மத்திய சட்டமந்திரி ரவிஷங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாக்கு எதிர்க்கட்சிகள் சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர்,   மசோதாவில் உள்ள கிரிமினல் சட்டப்பிரிவுகளை நீக்கம் செய்ய வேண்டும் என  தெரிவித்தார்.

அ.தி.மு.க சார்பில் பேசிய அன்வர் ராஜா, இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.

ஐதராபாத் எம்.பி ஓவைசி, இந்த மசோதா அடிப்படை உரிமைகளை மீறுகிறது மற்றும் முறையான சட்ட இணக்கம் இதில் இல்லை என்பதால் திரும்ப பெற வேண்டும் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து மசோதா குறித்து பேசிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,  “பெண்களின் உரிமைகள் மற்றும் நீதியை பாதுகாக்கவே, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், இதில், மதத்திற்கு தொடர்பில்லை” என்று கூறினார்.