டில்லி:

முத்தலாக் தடை மசோதா இன்று மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

17வது மக்களவை தொடர் கடந்த 17ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. எம்.பி.க்கள் மற்றும் சபாநாயகர் தேர்வு முடிவடைந்த நிலையில் இன்றுமுதல் வழக்கமான பணிகள் தொடங்கு கின்றன.

இஸ்லாம் மத்தில் மனைவியர்களை அவர்களுடைய கணவன்மார்கள், ‘தலாக்’ என்று  3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை மசோதா, நரேந்திர மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது.

மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதையடுத்து திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா ஏற்கனவே கடந்த மக்களவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் பாஜகக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நிறைவேற முடியாமல் போனது. அதையடுத்து நாடாளுமன்ற கலைக்கப்பட்டதால்,  முத்தலாக் தடை மசோதா காலாவதி ஆனது.

இந்நிலையில், முத்தலாக் மசோதா  இன்று மீண்டும் மக்களவையில்  தாக்கல் செய்யப்பட உள்ளது.  முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா-2019 என்று அந்த மசோதாவுக்கு பெயரிடப்பட்டுள்ளது. தற்போது அமலில் இருக்கும் அவசரச் சட்டத்தின் நகலையே மசோதாவாக மத்திய அரசு தாக்கல் செய்கிறது.

மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா, மக்களவை பதவிக்காலம் நிறைவடையும் பட்சத்தில் காலாவதியாகாது. ;அதே நேரத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்க ளவைக்கு அனுப்பப்படும் மசோதா, மக்களவை பதவிக்காலம் நிறைவடையும்பட்சத்தில் காலாவதியாகி விடும்.