மிஸஸ் இந்தியா போட்டியில் வென்ற திருப்த்தி அரவிந்த்

மிஸஸ் இந்தியா, பேஜண்ட்ஸ் அண்ட் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நடத்திய திருமண மானவர்களுக்கான 2017ம் ஆண்டுக்கான அழகிப் போட்டி கடந்த 4ம் தேதி சென்னையில் உள்ள ஃபெதர்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் மண்டல மற்றும் மாநில அளவில் ஏற்கெனவே வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது.

கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளில் அழகிப் பட்டம் வென்ற வர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இந்த போட்டிக்கு நடுவர்களாக  பிரபல அழகு கலை பயிற்சியாளர் லொவெல் பிரபு, நடன பயிற்சியாளர் வாணி மாதவ், சிகை அலங்கார நிபுணர் போனி சசிதரன், செலிபிரிட்டி ஃபுட் கன்சல்டன்டின் நிபுணர் நீதா பூபாலன், டாக்டர் மயில் வாகனன் துரை மற்றும் கர்னல் ரேணுகா டேவிட் ஆகியோர் இருந்தனர்.

திருமணமானவர்களுக்கான இந்த அழகிப் போட்டியில் அழகு மட்டும் அல்லாமல் தன்னம்பிக்கை, அணுகுமுறை, சமூக ஆர்வம், பிரச்னைகளைத் தீர்க்கும் முறை போன்ற வைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வெற்றி யாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மிஸஸ் இந்தியா மற்றும் கிளாஸிக் மிஸஸ் இந்தியா என இருவேறு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.

‘கிளாஸிக் மிஸஸ் இந்தியா’ அழகிப் பட்டத்தை கல்பனா தாகூர் என்பவர் தட்டிச் சென்றார்.

இரண்டாவது இடத்தில் மம்தா திரிவேதியும், மூன்றாவது இடத்தில் ரிங்கு பகத்தும் பட்டங்களை வென்றனர்.

மேலும், ‘மிஸஸ் இந்தியா’ பட்டத்தை திருப்த்தி அரவிந்த் வென்றார்.  இதன் இரண்டாவது இடத்தில் பிராச்சி அகர்வால் மற்றும் முன்றாவது இடத்தில் டாக்டர் டுயூ மீனா முடாங் ஆகியோர் பட்டங்களை வென்றனர்.