திரிபுரா : பாஜக – திரிபுரா மக்கள் முன்னணி கட்சி கூட்டணி உடைகிறது.

கர்தலா

திரிபுரா மாநிலத்தில் பாஜகவும் திரிபுரா மக்கள் முன்னணி கட்சியும்  வரும் 2019 பொதுத் தேர்தலில் தனித்தனியே போட்டியிட உள்ளன.

திரிபுரா மாநிலத்தில் இந்த வருட தொடக்கத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திரிபுரா மக்கள் முன்னணியும் பாஜகவும் கூட்டணை அமைத்து போட்டி இட்டன.   கடந்த 25 வருடங்களாக ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்து இந்தக் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது.   ஆயினும் இரு கட்சிகளுக்கும் இடையில் அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

பாஜக அரசு அமைத்த இரு அரசு அமைப்புக்களில் உறுப்பினர்கள் நியமிப்பதில் தங்களை ஆலோசிக்கவில்லை என தி ம மு கட்சி குற்றம் சாட்டியது   அதற்கேற்றார் போல் இரு பாராளுமன்ற தொகுதிகளின் தேர்தல் பார்வையாளர்களாக இரு பாஜக தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.   இதுவும் தி ம மு கட்சிக்கு அதிருப்தியை உண்டாக்கியது.

இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் மிருணால் காந்தி, “பாஜக மற்றும் தி ம மு கட்சிகள் கடந்த சட்டப் பேரவை தேர்த்லில் கூட்டணி வைத்திருந்தது.   அது அந்த தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்.   அடுத்து எந்த தேர்தலிலும் இணைந்து போட்டியிடுவதாக எந்த ஒப்பந்தமும் கிடையாது” என தெரிவித்துள்ளார்.

இதை ஒட்டி திரிபுரா மக்கள் முன்னணி கட்சி வரும் 2019 பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது

இதன் மூலம் சர்ச்சைகள் பெரிதாகி திரிபுரா மாநில பாஜக கூட்டணி உடைவது வெளியே தெரிய வந்துள்ளது.