மகாபாரதக் காலத்திலேயே இண்டர்நெட் இருந்தது : திரிபுரா முதல்வர்

கௌகாத்தி

ந்தியாவில் மகாபாரதக் காலத்திலேயே இணையம் இருந்தது என திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் கூறி உள்ளார்.

பாஜக வின் தலைவர்கள் பலரும் இந்தியா நெடுங்காலமாக விஞ்ஞான முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறி வருகின்றனர்.    மேலும் பல விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் புராண காலத்திலேயே இருந்துள்ளதாக கூறுகின்றனர்.     சுமார் ஒரு மாதம் முன்பு திரிபுரா மாநிலத்தின் முதல்வராக பிப்லாப் தேப் பதவி ஏற்றார்   அவர் நேற்று கௌகாத்தி நகரில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்டார்.

அந்த நிகழ்வில் பிப்லாப் தேப், “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மகாபாரதக் காலத்திலேயே இந்தியாவில் இண்டர்நெட் என அழக்கப்படும் இணையம் உபயோகத்தில் இருந்துள்ளது.    பார்வை அற்ற திருதராஷ்டிரனுக்கு சஞ்சயன் போரில் நடக்கும் விவரங்களை உடனுக்குடன் சொல்லி இருக்கிறான்.   இது இணைய தொழில்நுட்பத்தினால் தான் நடந்துள்ளது.    துணைக்கோள்களும் அப்போது இருந்துள்ளது.

இணையம் இப்போதும் மக்களை இணைத்து வருகிறது.  பிரதமர் மோடி இணையத்தின் மூலம் பல தரப்பு மக்களுடனும் தொடர்பில் உள்ளார்.  அவரது முகநூல்,  வாட்ஸ் அப், டிவிட்டர் பதிவுகள் பலரையும் சென்றடைகின்றன.   இதே போல் அனைத்து மாநில முதல்வர்களும் சமூக தளங்கள் மூலம் மக்களிடம் தொடர்பில் இருக்க வேண்டும்.

நம்முடையது பழைய கலாச்சாரம் மற்றும் நாகரிகம் என்றாலும் தொழில் நுட்பத்தில் நாம் அப்போதிருந்தே முன்னோடிகளாக இருந்துள்ளோம்.   நமக்கு இப்போதைய தொழில் நுட்பம் புதுமையானது இல்லை.     ஏற்கனவே நமக்கு தொழில்நுட்ப அறிவு இருந்துள்ளஹ்டால் தான் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களில் தலைமைப் பதவிகளில் இந்தியர்கள் உள்ளனர்”  எனக் கூறி உள்ளார்.