டில்லி:

நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. திரிபுராவில் பாஜக.வும், நாகாலாந்தில் பாஜக கூட்டணியும் முன்னிலையில் உள்ளது. மேகாலயாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.

திரிபுராவில் கடந்த 18ம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் 27ம் தேதியும் தேர்தல் நடந்தது. திரிபுராவில் 59, நாகாலாந்தில் 60, மேகாலயாவில் 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடந்தது.

மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சியும், திரிபுராவில் இடதுசாரி ஆட்சியும், நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி கட்சி ஆட்சியில் உள்ளன. திரிபுரா, நாகாலாந்தில் கூட்டணி கட்சிகளுடன் பா.ஜ.க தேர்தலை சந்தித்தது.
மேகாலயாவில் தனித்து போட்டியிட்டது.

தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை 8 மணிக்கு முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திரிபுராவில் பா.ஜ. பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இங்கு பாஜக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இடதுசாரி ஆட்சி திரிபுராவில் முடிவக்கு வந்துள்ளது. நாகாலாந்தில் பா.ஜ.க கூட்டணி முன்னிலையில் உள்ளது. மேகாலயாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் சூழ்நிலையில் உள்ளது.

முன்னணி நிலவரம்:

திரிபுரா :
இடதுசாரிகள் 18, பா.ஜ., கூட்டணி -41, காங்கிரஸ்- 0, மற்றவை – 0.

நாகாலாந்து :
என்பிஎப்- 25, பா.ஜ.க கூட்டணி -30, மற்றவை -5, காங்கிரஸ் 0.

மேகாலயா :
காங்கிரஸ்- 20, என்பிபி -19, பாஜக -2, மற்றவை -18.