இன்று காலை திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் தொடங்கியது!

கர்த்தலா

ன்று காலை திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

அகர்தலா

திரிபுரா மாநில சட்டமன்ற ஆயுட்காலம் முடிவடைந்ததை ஒட்டி மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.    இதில் சாரிலாம் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமேந்திரா மரணம் அடைந்தார்.    அதனால் அந்த தொகுதிக்கான தேர்தல் வரும் மார்ச் 12 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.     மொத்தம் 307 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.   மாநிலம் முழுவதும் உள்ள 3214 ஓட்டுப் பதிவு மையங்களில் 25,73,413 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்த தேர்தலின் முடிவுகள் மார்ச் 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.