டில்லி:

யந்திர கோளாறு மற்றும் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறை காரணமாக  ஆந்திராவில் வாக்குப்பதிவு நள்ளிரவு வரை நீடித்தது.

திரிபுராவில் மக்கள் வரிசையாக நின்று வாக்களித்தனர்

17வது மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 91 தொகுதிகளில் நேற்று நடைபெற்று முடிந்தது.  . சராசரியாக 65 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த தேர்தலுடன்  ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. முதற்கட்ட வாக்குப்பதிவில் சராசரியாக 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குப்பதிவில் திரிபுரா முதலிடம், பீகார் கடைசி இடமும் பிடித்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் 81.80 சதவீதம் வாக்குகள் பதிவானது. நாட்டிலே யே குறைந்த பட்சமாக பீகாரில் 50 சதவீதம் வாக்குகள் பதிவானது.

ஆந்திராவில் மாலை நேரத்தில் வாக்களிக்கும் காட்சி

ஆந்திர மாநிலத்தில் ஏராளமான மின்னணு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமானது. மேலும் சில இடங்களில் வன்முறை வெறியாட்டம் காரணமாகவும் தேர்தல் இடையில் நிறுத்தப்பட்டு மீண்டும் நடைபெற்றது.  இதன் காரணமாக  பல வாக்குச்சாவடிகளில் இரவு வரை வாக்குப்பதிவு  நீடித்தது. அங்கு சுமார்   80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.