த்ரிஷாவுக்கு விடியோ காலில் கம்பெனி கொடுக்கும் ராணா மற்றும் அல்லு அர்ஜுன்..!

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

அணைத்து திரையுலகினரும் வீட்டில் செய்யும் சிறு சிறு சேஷ்டைகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர் .அந்த வகையில் நடிகை த்ரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணா மற்றும் அல்லு அர்ஜுன் உடன் வீடியோ காலில் பேசியதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா.

“இந்த கிராக்குகள் எனக்கு கம்பெனி கொடுக்கிறார்கள்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.