வைரலாகும் த்ரிஷா ஹேர் கட் செய்யும் வீடியோ….!

கொரோனா ஊரடங்கினால் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால் பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்கள் மூலமாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

ஒரு சில நடிகர்கள் தாங்கள் செய்யும் அன்றாட வேலைகள் , டிக் டாக் , பாட்டு , நேரலை என சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகை த்ரிஷாவின் முடியை வெட்டடும்மா, வேண்டாமா ? என்ற வீடியோ ஒன்றை JFW – Just for Women இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். அதில் த்ரிஷாவின் குவாரன்டைன் முடி வெட்டுதல் என பதிவிட்டுள்ளார் .

திரிஷாவின் இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் ஏதோ அவர்கள் முடியை வெட்டுவது போல் ஃபீல் பண்ணி வேண்டாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் .

இந்த ஊரடங்கில் த்ரிஷா கௌதம் மேனனின் ‘கார்த்திக் தையல் செய்த எண்’ குறும்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed