கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் குறும்படத்தில் த்ரிஷா…..!

கொரோனா ஊரடங்கால் எந்த ஒரு படப்பிடிப்பும் இல்லாமல் திரை உலகினர் சமூக வலைத்தளத்தில் பொழுதை கழித்து வருகின்றனர் .

இன்னும் சிலர் லைவில் கேள்வி பதில் , பாடல் காட்சி என்று ஏதேனும் வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

இதனிடையே வீட்டிற்குள்ளேயே குறும்படம் ஒன்றை உருவாக்கி அதை வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள ‘லாக்டவுன்’ என்ற குறும்படம் இணையத்தில் வெளியானது. ஆதவ் கண்ணதாசன் அதை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் கெளதம் மேனனும் குறும்படம் ஒன்றை இயக்கி வருவது உறுதியாகியுள்ளது.

கெளதம் மேனன் வீட்டிலேயே இருந்துக் கொண்டு, த்ரிஷாவுக்கு மொபைல் வீடியோ கால் மூலம் எப்படி படமாக்க வேண்டும் என்று சொல்வதையும், அதற்காக கையில் ஒரு ஐபோன் வைத்துக் கொண்டு இது சரியா என்று கேட்கும் வீடியோவையும் த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.