மீண்டும் இயக்குனர் மணிரத்தினத்துடன் இணையும் த்ரிஷா…!

தனது பல நாள் கனவு கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ’ஜெயம்’ ரவி, அவரது மகன் ஆரவ் ரவி, ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ் , ஜெயராம் , அஸ்வின் ஆகியோரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது

படத்தின் கலை இயக்குநராக தோட்டாதரணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் . இது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உருவாக உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் பட்ஜெட் ரூ.800 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து 12 பாடல்கள் எழுதுகிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் தான் நடிக்கவுள்ளதை உறுதிப்படுத்திய லால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடன் நடிக்கவுள்ள நடிகர்களின் பட்டியலைத் தெரிவித்துள்ளார். அதில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் ஆகியோரது பெயருடன் அமிதாப் பச்சன் மற்றும் த்ரிஷா ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

‘ஆய்த எழுத்து’ படத்தை தொடர்ந்து திரிஷா மீண்டும் மணிரத்தினதுடன் இணைந்துள்ளார் .