Random image

அமிதாப்பச்சன் நடித்த படம் தமிழில் தயாராகிறது : தீபிகா படுகோனே வேடத்தில் திரிஷா..

 

இந்தியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற படம் – ‘PIKU’

அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, இர்பான் கான் நடித்திருந்தனர். தந்தைக்கும், மகளுக்குமான பாசப்போராட்டத்தை சித்தரித்த இந்த படம் நூறு கோடி ரூபாய் வசூலித்தது.

 

சாலைப்பயணத்தில் நடக்கும் சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் அமிதாப்பச்சன் கோபக்கார தந்தையாக நடித்திருந்தார்.

இந்த படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ’ரீ-மேக்’ செய்யும் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்தியில் தீபிகா படுகோனே நடித்த வேடத்தில், இரு மொழிகளிலும் திரிஷா நடிக்கிறார். மற்ற நடிகர்கள் முடிவாகவில்லை.

– பா. பாரதி