ஜல்லிக்கட்டு தடை விவகாரத்தில் அரசியல் கட்சிகள், மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் ஆகியவற்றைவிட நெட்டிசன்களிடம் சிக்கி அதிகம் வதைபடுவது, பாவம்.. நடிகை த்ரிஷாதான்.

ஜல்லிக்கட்டு தடைக்குக் காரணமான பீட்டா அமைப்பின் ஆதரவாளர் இவர் என்று கூறி, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் த்ரிஷாவை உண்டு இல்லை என்று ஆக்கிவருகிறார்கள்.

“எய்ட்ஸ் நோயால் த்ரிஷா மரணமடைந்தார்” என்று சிலர் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களை பரவ விட.. த்ரிஷா கொதித்துப்போய்விட்டார்.

 

“பெண்களைக் கொச்சைப் படுத்துபவர்கள் தமிழ் கலாச்சாரம் பற்றி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்” என்று ட்விட்டினார். அதோடு, தமிழ்ப் படங்களில் இனி நடிக்கப்போவதில்லை எனவும் அறிவித்தார்.

இதற்கிடையே, த்ரிஷாவின் ட்விட்டர் பக்கத்தில், “நான் தமிழர்தான். ஆனால் ஜல்லிக்கட்டை எதிர்க்கிறேன்” என்று மீண்டும் ஒரு பதிவு வர….  ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் இன்னும் ஆத்திரப்பட்டுவிட்டார்கள். த்ரிஷாவை மேலும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்கள்.

பிறகு த்ரிஷா, “என் ட்விட்டர் கணக்கை, ஹேக் செய்து யாரோ அப்படி பதிவிட்டுவிட்டார்கள். நான் அப்படி எழுதவில்லை” என்று அதே (தனது) ட்விட்டர் கணக்கில் பதிவிட்டார்.

இப்போது இதுவும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

“ஒருவரது  ட்விட்டர் கணக்கை ஹேக் செய்பவர்கள், பாஸ்வேர்ட் உட்பட செட்டிங்ஸை  மாற்றி விடுவார்கள். சம்பந்தப்பட்டவர்களால் மீண்டும் அந்த ட்விட்டர் கணக்குக்குள் நுழையவே முடியாது.  ஆனால் த்ரிஷாவே ஜல்லிக்கட்டுக்கு எதிராக எழுதிவிட்டு, எதிர்ப்பு பெரிய அளவில் எழுந்ததும் தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சொல்கிறார்” என்கின்றனர் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்.

இதற்கு ஏற்றமாதிரி, திரைவட்டாரத்திலும், “இவரது “மயக்கங்கள்”, இரவு நேர பார்ட்டிகள் எல்லாம் திரைப்பட வட்டாரத்தில் ரொம்பவே பிரபலம். இவை குறித்து ஏற்கெனவே ஒளிப்படங்களுடன் செய்திகள் வந்திருக்கின்றன. இவற்றில் சில படங்களை அவரே வெளியிட்டதும் உண்டு.

மொத்தத்தில் த்ரிஷாவின் பேச்சு, பொழுது விடிஞ்சா போச்சு என்கிற ரகம்தான்.

த்ரிஷா மட்டுமல்ல.. திரை நட்டத்திரங்கள் வேறு சிலரும், ஏதாவது ட்டிவிட்டு, பிரச்சினை ஆனதும், யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று சொல்வது அடிக்கடி நடந்து வருகிறது.  இனியாவது அவர்கள் தன்னிலை உணர்ந்து ட்விட்ட வேண்டும்” என்கிறார்கள்

பார்த்து சூதானமா இருங்க மேடம்!