விஜய் சேதுபதியுடன் இணையும் த்ரிஷா..!

--

trisha-story_647_031816120151

விஜய் சேதுபதி தமிழ்சினிமாவில் இன்று தனக்கு என ஒரு இடத்தை பிடித்துவிட்டார், இந்த ஒரு வருடம் மட்டும் கிட்டத்தட்ட 6படங்கள் வெளியாகியுள்ளது மேலும் பல படங்கள் ரிலீசுக்கு வெயிட்டிங்கில் உள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி தனக்கு நெருக்கமான ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் முதல் முதலில் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

பிரேம் குமார் தான் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதானல் இருவருக்கும் நல்ல நட்பு இருந்ததால் பிரேம் சொன்ன கதை இவருக்கு பிடித்துவிட உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு (2017) தொடங்கவுள்ளதாம்.

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவை அனுகியுள்ளாராம் பிரேம், அவரிடம் முழு கதையையும் சொன்ன பின்னர் அவர் கதை மிகவும் நன்றாகவுள்ளது, எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க என்று சொல்லியுள்ளார், தற்போது த்ரிஷா சதுரங்க வேட்டை 2 படத்தில் பிசியாகவுள்ளதாலும் அது மட்டும் அல்ல இவரின் நடிப்பில் கொடி திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாலும் அவரை காக்கவைத்துள்ளாராம்.

ஒரு வேலை கொடி வெற்றி பெற்றால் சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளாரோ த்ரிஷா..?