டிவிட்டர், இன்ஸ்டாவிலிருந்து திரிஷா திடீர் விலகல்.. காரணம் என்ன?

மூக வலைதளங்களில் ஆர்வம் காட்டும் சில நடிகைகள் திடீரென்று சில காலம் விலகி இருந்து பின்னர் இணைகின்றனர். சமீபத்தில் நடிகை குஷ்புவும் அதுபோல் விலகி இருந்து இணைந்தார். தற்போது திரிஷா அந்த முடிவை எடுத்திருக்கிறார்.

கொரோனா ஊரடங்கில் எல்லா நடிகைகளும் இணைய தளத்தில் மூழ்கி இருக்கின்றனர். தினமும் விதவிதமான தகவல்களை பகிர்கின் றனர். நடிகை திரிஷாவும் சமூக வலை தளத் தில் அதிக ஆர்வம் காட்டுபவர் . சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கிய ’கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தில் நடித்தார். சமூக வலை தளம் வழியாக அதுபற்றிய தகவல்களை பகிர்ந்தார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம், டிவிட்டரி லிருந்து விலகுவதாக தெரிவித்திருக்கிறார் திரிஷா. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள மெசேஜில், ’என் மனதிற்கு இந்த நேரத்தில் மறதி தேவைப்படுகிறது. இன்ஸ்டாகிராம், டிவிட்டர் டிஜிட்டல் போதைப்பொருளி லிருந்து சில காலம் விலகி இருக்க உள்ளேன். இதற்கு வேறுவொன்றும் காரணமில்லை. விரைவிலேயே சந்திக்கிறேன். எல்லோரும் வீட்டிலேயே இருங்கள், பத்திரமாக இருங்கள். இதுவும் கடந்து போகும். அனைவரையும் நேசிக்கிறேன்’ எனக் கூறி உள்ளார் திரிஷா.