சிரஞ்சீவி படத்திலிருந்து த்ரிஷா விலகல்….!

‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ராம் சரண் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி.

இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்கி வருகிறார் . இது சிரஞ்சீவியின் 152-வது படம். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக திரு, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன், இசையமைப்பாளராக மணிசர்மா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு நாயகியாக த்ரிஷா நடித்து வருவதாகத் தகவல் வெளியானது. இப்படத்தின் தலைப்பு ‘ஆச்சாரியா’ என்றும் தகவல் வெளியானது .

தற்போது இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டதாக த்ரிஷா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சிரஞ்சீவியின் திரைப்படத்திலிருந்து நான் விலகிவிட்டேன்.மீண்டும் உங்களை ஒரு நல்ல படத்தின் மூலம் சந்திப்பேன் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார் த்ரிஷா.