‘96’ ஜானுவாக மாறிய “நாய்” – புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்ட த்ரிஷா

’96’ படத்தில் த்ரிஷா அணிந்திருந்த உடை பல இளம் பெண்களை கவர்ந்தது தெரிந்த விஷயம் தான். ஆனால் தீவிர ரசிகர் ஒருவர் தனது நாய்க்கு ‘96’ ஜானு உடை அணிந்தது த்ரிஷா ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

janu

பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி சி.பிரேக்குமார் இயக்கியத்தில் வெளியான ‘96’ திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அதில் பள்ளிப்பருவம் முதல் ராம்-ஜானுவாக நடித்த விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவை காதலர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

குறிப்பாக, படம் முழுவதும் த்ரிஷா அணிந்திருந்த மஞ்சள் நிற சுடிதார், அப்படத்தின் ரசிகர்களையும் தாண்டி, பல தரப்பு மக்களையும் கவர்ந்தது. த்ரிஷாவின் இந்த உடை பிரபலமானதையடுத்து, தீபாவளி ஸ்பெஷலாக ஜானுஸ் டிரஸ் விற்பனைக்கு வந்தது.

trisha

இந்த ஆடை பெண்களை மட்டுமே கவர்ந்து வந்த நிலையில், தற்போது ரசிகர்கள் தங்களது வளர்ப்பு நாய்க்கும் ஜானு கெட்டப் போட்டு அசத்துகின்றனர். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அப்படி, ரசிகர் ஒருவர் தனது நாயை ஜானுவாக மாற்றிய புகைப்படத்தை நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்துக்கு த்ரிஷா ரசிகர்களும், ஜானு ஃபேன்ஸும் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.