‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ‘ஹோம்லி கேர்ளாக’ நடிக்கும் திரிஷா

ன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவாகும் ‘பேட்ட’ ரஜினிகாந்த் நடிக்கும் 165-வது படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்துக்கு இளம் இசைஅமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

கடந்த ஜூன் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

தற்போத வாரணா பகுதியில் இதன் படிப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில்,  ரஜினியின் பிளாஷ்பேக காட்சிகள்  படமாகி வருகின்றன. இந்த பிளாஷ்பேக் காட்சிகளில் முறுக்கு மீசை கெட்டப்பில் ரஜினி நடித்து வருகிறார். அவருக்கு  ஜோடியாக த்ரிஷா நடித்து வருவதாகவும், வாரணாசியில் படமாக்கப்படும் இக்காட்சிகள் மதுரை பின்னணியில் சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்சேதுபதியுடன் நடிகை திரிஷா நடித்து சமீபத்தில் வெளியான 96 படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சிறிய இடைவேலைக்கு பிறகு படத்தில் நடித்திருந்தாலும் தனது ரசிகர்கள் அளித்த உற்சாக வரவேற்பு த்ரிஷாவிற்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை உறுதிப்படுத்தும் விதத்தில், தனது டிவிட்டர் பக்கத்தில் திரிஷா பதிவிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி