விக்ரம் படத்தில் இருந்து த்ரிஷா விலக இததான் காரணமாம்!

 

ரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற படம் சாமி. தர்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. விக்ரம் ஹீரோவாக நடிக்க.. முந்தைய சாமி படத்தில் நடித்த த்ரிஷாவே இதிலும் ஹீரோயினாக புக் ஆனார். கூடவே கீர்த்தி சுரேஷூம் இன்னொரு ஹீரோயினாக ஒப்பந்தமாார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் திடீரென த்ரிஷா படத்தலிருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியானது. தற்போது இந்தத் தகவலை த்ரிஷா உறுதி செய்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “படக்குழுவினர்களுக்கும் எனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

படத்தில் கீர்த்தி சுரேஷ் கேரக்டரை விட த்ரிஷாவின் கேரக்டருக்கு முக்கியத்தவம் குறைவாக இருந்ததால் விலகிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.