தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகள் பட்டியலில் இருப்பவர் நடிகை த்ரிஷா.கடந்த ஆண்டு, தமிழில் அவர் நடித்த ‘96’ படம் பெரும் வரவேற்பை பெற்றது.

‘பேட்ட’ படத்தை அடுத்து, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் த்ரிஷா .

ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இந்த படத்தை, ‘எம்.சரவணன் இயக்கவிருக்கிறார். ‘ராங்கி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

ஆக்‌‌ஷன் அட்வென்சர் கதையில் உருவாகிவரும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.