கேரள வெள்ளம் ; இந்து கோவிலில் ஈத் தொழுகை

திருச்சூர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர் பக்ரீத் தொழுகை நடத்த இந்து கோவிலில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் லட்சக்கணக்கானோர் வீடிழந்துள்ளனர்.  அவர்கள் தற்போது பாதுகாப்பு முகாம்களில் வசித்து வருகின்றனர்.    மழையால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள் சமீபத்தில் வந்த பக்ரீத் பண்டிகையின் போது ஈத் தொழுகை நடத்த இடமின்றி தவித்தனர்.

திருச்சூர் மாவட்டத்தில் உள்ள எரவத்தூர் பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில்  கோவில் அதிகாரிகள் இஸ்லாமியர்கள் தங்க இடம் அளித்துள்ளனர்.  கடந்த புதன்கிழமை அன்று பக்ரீத் தொழுகை நடத்த அந்த கோவில் மண்டபத்தில்  ஒரு பகுதியை அதிகாரிகள் அளித்துள்ளனர்.

இந்த மண்டபத்தில் தங்கி இருந்த 200 இஸ்லாமியர்களும் இந்த தொழுகையில் கலந்துக் கொண்டுள்ளனர்.