ஃபகத் -நஸ்ரியா ஜோடி வாங்கிய சொகுசுக் காரால் உருவான சர்ச்சை….!

நஸ்ரியா – ஃபகத் இருவரும் சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள போர்ஷே 911 மாடல் சொகுசுக் காரைக் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாங்கியுள்ளனர். இந்தக் காரை இந்தியாவிலேயே முதல் முறையாக இவர்கள்தான் வாங்கியுள்ளனர்.

இந்தத் தகவலை ஃபகத் பாசில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்திருந்தார்.

உலகமே இப்படி அவதிப்படும் வேளையில் இவ்வளவு விலை உயர்ந்த கார் தேவைதானா, இதற்குப் பதில் இல்லாதவர்களுக்கு அந்தப் பணத்தைப் பகிர்ந்து கொடுத்து உதவியிருக்கலாமே என்ற ரீதியில் சிலர் கமெண்ட் செய்திருந்தனர் .

இதற்கு நடிகை அஹானா கிருஷ்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் :-

”மக்கள் தங்கள் பொறாமையை அடக்க முடியவில்லையென்றால், அது இப்படித்தான் விஷம் போல வெளியே வந்து விழும். இதுபோன்ற பின்னூட்டங்களைப் பதிவிடுபவர்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். இங்கே தெளிவாகத் தெரிவது என்னவென்றால் அடுத்தவர் வாழ்வில் ஒரு நன்மை நடக்கும்போது வரும் பொறாமையே அன்றி வேறில்லை. அடுத்தவர்களுக்காக சந்தோஷப்பட முயற்சி செய்யுங்கள். தேவையற்ற சூழல்களில் உங்கள் வாயை மூடிக் கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார் .