டி ஆர் எஸ் கட்சி பாஜகவின் பி அணி : ராகுல் குற்றச்சாட்டு

கோஸ்கி, தெலுங்கானா

தெலுங்கானா மாநில ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் சின் பி அணி என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

வரும் 7 ஆம் தேதி தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள், ஓரணியாகவும், பாஜக மற்றொரு அணியிலும், தெலுங்கானா ராஷ்டிய சமிதி கட்சி மற்றொரு அணியாகவும் களத்தில் உள்ளன. நேற்று முன் தினம் பிரதமர் மோடி இரு பேரணிகளில் கலந்துக் கொண்டார். நேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரும் பேரணிகளில் கலந்துக் கொண்டனர்.

மோடி தேர்தல் பிரசாரத்தின் போது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி ஆர் எஸ்) கட்சி சோனியாவின் பயிற்சிப் படி நடப்பதாகவும் எனவே இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை எனவும் கூறி இருந்தார். தெலுங்கானா மாநிலம் கோஸ்கி என்னும் இடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசும் போது இதற்கு பதில் அளித்தார்.

ராகுல் காந்தி, “டி ஆர் எஸ் என்பதன் பொருள் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி என்பது இல்லை. அதன் உண்மையான பொருள் தெலுங்கானா ராஷ்டிய அங்பரிவார் என்பதாகும். இந்த கட்சி பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் சின் பி அணியாகும். ஆனால் மோடி டி ஆர் எஸ் மற்றும் காங்கிரஸ் ஒன்று போலவெ உள்ளதாக கூறி வருகிறார். இது தவறான கருத்தாகும்.

உண்மையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பாஜகவின் கையாள் என கூறலாம். அவர் ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைசியுடன் மறைமுக தொடர்பு வைத்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை காங்கிரஸ் தோற்கடிக்கக் கூடாது என்னும் உறுதியுடன் அக்கட்சிகள் செயல் பட்டு வருக்ன்ரன.

முக்கியமாக தேசிய அளவில் காங்கிரஸ் வெற்றி பெறக்கூடாது என அக்கட்சியினர் சபதம் செய்துள்ளனர். மக்களாகிய நீங்கள் கவனித்துப் பார்த்தால் சந்திரசேகர் ராவ் எந்த ஒரு கூட்டத்திலும் மோடியை தாக்கிப் பேசுவதில்லை என்பது நன்கு விளங்கும். எத்தனை முறை அவர் ரஃபேல் முறைகேடு பற்றி பேசி உள்ளார் ? ” என சரமாரியாக குற்றம் சாட்டி உள்ளார்.

You may have missed