டிஆர்எஸ் கட்சி ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி சேராது: முதல்வர் மகன் தகவல்

ஐதராபாத்:

தெலுங்கான ராஷ்டிரிய சமீதி கட்சி எந்த நேரத்திலும் பாஜகவுடன் சேராது என்று தெலுங்கான முதல்வர் சந்திர சேகரராவின் மகனும்  கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான கே.டி.ராமராவ் கூறி உள்ளார்.

119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலங்கான மாநிலத்தில் டிசம்பர் 7ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைப்பெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கே.டி.ராமராவ்

இதைத்தொடர்ந்து  ஆளும் ராஷ்ட்ரிய சமிதி கட்சி-யும், எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரஸ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியுடன் கூட்டணி அமைத்தும் ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தெலுங்கான கட்சி காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளது என்று தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் கட்சியினரிடம் பேசிய தெலுங்கான ராஷ்ரிய சமீதி கட்சி தலைவர் சந்திர சேகர ராவ் மகனும், மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.டி.ராமராவ்  “பி.ஜே.பி உடன் நாங்கள் செல்வோம் என்று கூறப்படும் வதந்திகளும், குற்றச்சாட்டுகளும் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

எந்த சூழ்நிலையிலும் டிஆர்எஸ் கட்சி பிரதமர்  நரேந்திர மோடி அல்லது பி.ஜே.பி உடன் ஒரு போதும் செல்லாது… இதை நான் சத்தியம் செய்து கூறுகிறேன் என்றும் கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி