கொல்கத்தா: பயன்படாமல் இருந்த இந்தியா போஸ்ட் விமானத்தை ஏற்றிவந்த டிரக் ஒன்று பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த ஓராண்டு காலமாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்த இந்தியா போஸ்ட் விமானத்தை இடம்மாற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அந்த விமானம் ஒரு ராட்சத டிரக்கில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த டிரக், மேற்குவங்க மாநிலத்தில் துர்காபூர் மாவட்டத்திலிருந்து, பாசிம்பர்த்மான் என்ற பெயர்கொண்ட தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்து.

அப்போது அந்த சாலையில் குறுக்கே கடந்துசென்ற உயரம் குறைந்த பாலம் ஒன்றில் சிக்கிக்கொண்டது. விமானத்தின் மேற்பகுதி பாலத்தின் அடியில் உரசி சிக்கிக்கொண்டது.

இதனால், டிரக்கினால் அதற்கு மேலும் நகர முடியவில்லை. டிரக்கையும் விமானத்தையும் மீட்க பலமணிநேர முயற்சிகள் நடந்த காரணத்தால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.