சீன விமானங்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை : அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன் :

கொரோனா வைரஸ் காரணமாக பயணிகள் விமான போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் சீனாவுக்குள் நுழைய சீன அரசு தடை விதித்திருந்தது.

சீன அரசு விதித்துள்ள இந்த தடையை நீக்கக்கோரி அமெரிக்க அரசு கேட்டுக்கொண்டபோதும், சீன அரசு இன்றுவரை அதற்கு செவிசாய்க்கவில்லை.

கொரோனா வைரஸ் பரவியது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே பனிப்போர் நிகழ்ந்து வரும் வேலையில், சீன அரசு விமானங்கள் அமெரிக்காவிற்குள் தற்போது சென்றுவருவது போல், தங்கள் விமானங்களும் சீனாவிற்கு சென்றுவர அனுமதியளிக்கவேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சீனா ஏற்கவில்லை.

இந்நிலையில், சீன பயணிகள் விமானம் எதுவும் வரும் ஜூன் 16 ம் தேதி முதல் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.