Trump and Macron will meet in during May’s meeting between NATO leaders

ப்ரான்ஸ் அதிபர் மெக்ரானை அமெரிக்க அதிபர் விரைவில் சந்திக்க இருக்கிறார்.

ப்ரான்ஸின் புதிய அதிபராக மெக்ரான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். உலகின் பல நாடுகளில் வலதுசாரி சக்திகள் தலைமைக்கு வந்து கொண்டிருக்கும் தருணத்தில், நாகரிக முதிர்ச்சி பெற்ற ப்ரான்ஸில் அதற்கு நேரெதிரான தீர்ப்பை மக்கள் அளித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் முடிவுக்கு எதிரான தங்களது மனநிலையையும் ப்ரான்ஸ் மக்கள் இந்தத் தேர்தலில் வெளிப்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது.

ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதற்கு நேரெதிரான அடையாளங்களையும், அணுகுமுறைகளையும் கொண்டவர். இந்தப் பின்னணியில் ப்ரான்ஸ் அதிபர் மெக்ரோனுடனான ட்ரம்பின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ப்ரஸ்ஸலில் வரும் 25 ஆம் தேதி இருவரும் சந்திக்க இருப்பதாக வெள்ளைமாளிகையில் இருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.