வாஷூங்டன்

அமெரிக்காவில் கொரோனாத் தொற்று  பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதால் இந்திய அரசிடம் “ஹைட்ராக்சி குளோரோகுயின்”  மருந்தை வழங்கும்படி டிரம்ப்  கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து பிரதமர் மோடியிடம்  தாம் பேசியதாகவும், இனிவரும் நாட்களில் கொரோனாவால் பெரும் உயிர்ச்சேதங்கள் ஏற்படும் எனக் கவலை தெரிவித்த அவர்,  ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மீதான தடையை நீக்கி, அதனை தங்கள் நாட்டுக்கு வழங்கும்படி கேட்டுக் கொண்டார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர்,  “இந்தியாவில் 1.5 மில்லியன் மக்கள் உள்ளதால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்” தடைசெய்யப்பட்டுள்ளது. மலேரியா பாதித்த நாடுகளில்  இம்மருந்தை எடுத்துக்கொண்ட பலருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட வில்லை.  எனவே மருத்துவர்களின் ஆலோசனைப்படி அம்மருந்தை தாமே உட்கொள்ள தயாராக இருப்பதாகவும்,

“அடிப்படை முடிவுகளை கணிக்கும் போது,   பல பதிற்றாண்டுகளாக மலேரியாவிற்கு பயன்படுத்தும் “ஹைட்ராக்சி குளோரோகுயின்” மிக சிறந்த முறையில் கொரோனாவிற்கு நலம் தருவதாகவும் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகளவில் 150 நாடுகளில் 64 ஆயிரம் மக்கள் இறந்து, 1.7 மக்கள் தொற்று நோயாளர்களாக மாறிய பின்பே அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில்  ஆராய்ச்சியாளர்கள் இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க விரைந்து செயல்பட்டு வருகின்றனர்…

இந்திய வர்த்தக பொது இயக்குநரகம் மார்ச் 25 முதல் “ஹைட்ராக்ஸி குளோரோகுயின்” ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகளவில் 150 நாடுகளில் 64 ஆயிரம் மக்கள் இறந்து, 1.7 மக்கள் தொற்று நோயாளர்களாக மாறிய பின்பே அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில்  ஆராய்ச்சியாளர்கள் இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க விரைந்து செயல்பட்டு வருகின்றனர்…