மும்பை:
மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தும் மருத்து மும்பை சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ள நோயாளிகளிடம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா ஹாட்ஸ்பாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், தாராவி முதல் வொர்லி கோலிவடா சேரிப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கு இந்த மருந்து வழங்க உத்தேசிக்கப்பட்டது. பின் இந்த மருந்து ஆயிரம் பேருக்கு மட்டும் வழங்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் டாக்டர்கள், நிடி ஆயோக் நிபுணர்கள், மகாராஷ்டிரா பல்கலைகழகத்தின்ங சுகாதார அறிவியல் துறை அதிகாரிகள், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து உள்ள குழு,ஏப்ரல் 13ம் தேதி, எவ்விதமான மருத்துவ கொள்கை மேற்கொள்வது என்பது தொடர்பாக வீடியோ கான்பரன்சிங்கில் விவாதித்தது. இதில் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்துடன் வைட்டமின் சி மாத்திரைகளை வழங்க வேண்டும் என்று சிலரும், ஹைட்ரோகுளோரோகுயின் மருந்துடன் ஜிங்க் மாத்திரைகளை வழங்க வேண்டும் என்று சிலரும் வலியுறுத்தினர். இந்த 2 தேர்வுகளில் எதில் நல்ல முடிவுகள் வரும் என்பதை கண்டறிய திட்டமிடப்பட்டது.

15 வயதிற்குட்பட்டவர்கள், இதய நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோருக்கு இந்த மருந்து வழங்கப்படவில்லை. அதேபோல், சேரிப்பகுதிகளில் வசிப்போருக்கும் தகுந்த பரிந்துரையின்றி இந்த மருந்து வழங்கப்படவில்லை. இந்த மருந்து உட்கொண்ட 55 வயதிற்கு மேற்பட்டோரின் உடல்நிலை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டது.

மும்பை காவல்துறையில் பணியாற்றும் சிலருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து, அவர்களுக்கு ஹைட்ரோகுளோரோகுயின் + வைட்டமின் சி மாத்திரை இணைந்து வழங்கப்பட்டது.

மும்பையில் 2018-19 ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு சதுர கிலோமீட்டரில், 26,453 பேர் வசிக்கின்றனர் சேரிப்பகுதிகளில் இதன் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். தாராவி பகுதியில், 10க்கு 10 அறையில் குறைந்தது 5 முதல் 8 பேர் வரை இருப்பர். சில இடங்களில் 50 பேர் வரை இருக்க வாய்ப்புண்டு. இத்தகைய இடங்களில் தனிமனித இடைவெளி என்பதற்கு சாத்தியமே இல்லை. கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளில், இந்த ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து ஒரு தடுப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது என்று மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை திட்டங்களை வகுத்தவர்களுள் ஒருவரான டாக்டர் சுபாஷ் சலுங்கே தெரிவித்துள்ளார். தாராவி பகுதியில் அதிகளவில் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், அவர்களில் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து வழங்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக குறைக்கப்பட்டது குறித்து மும்பை மாநகராட்சி ஆணையர் பர்வீன் பர்தேசி கூறியதாவது, இது சோதனை நடவடிக்கையே ஆகும் என்று கூறியுள்ளார்.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கே இந்த மருந்து தரப்பட உள்ளது. இதில் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து ஆராயப்பட்ட பின்னரே மற்றவர்களுக்கு இது வழங்கப்படுமா இல்லயா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று துணை கமிஷனர் சுரேஷ் ககானி தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து கொரோனா பாதிப்பை குணப்படுத்துமா அல்லது பாதிப்பின் வீரியத்தை மட்டும் குறைக்குமா என்பது குறித்த ஆதாரம் இல்லை. இருந்தபோதிலும் அதன் பின்விளைவுகள் குறித்து நாம் ஆராயவேண்டியுள்ளது. இந்த மருந்து எதற்கும் தீர்வாக அமையாது என்று எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்த மருந்து உட்கொள்பவர்களுக்கு இதயத்துடிப்பு சீராக இருக்காது என்று குலேரியா குறிப்பிட்டுள்ளார்.

ஹைட்ரோகுளோரோகுயின் மருந்திற்கு பிரான்ஸ் அரசு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்த மருந்து வழங்கப்பட்ட கொரோனா பாதிப்பு கொண்டவர்களுக்கு இதய நோய் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மருத்துவர்களின் மேற்பார்வையில் அதுவும் மருத்துவமனையிலேயே இந்த மருந்து வழங்கப்பட வேண்டும். உடனடியாக பாதிப்பை ஏற்படுத்துவதால் இந்த நடவடிக்கை என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து உட்கொண்ட சிலருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளதாகவும் மயோ கிளினிக் இதய நோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தொற்று உள்ளவர்களை ஈசிஜி பரிசோதனையின் போது ஏற்படும் வெப்ப மாறுதல்களும் கணக்கில் கொள்ளப்பட்டது. இந்த மாறுபாடே, இதயத்துடிப்பில் மாற்றத்தை நிகழ்த்தி மரணத்துக்கும் வழிவகுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் லாங்கோன் பல்கலைகழக ஆய்வின் படி, கொரோனா தொற்று உள்ள 84 பேருக்கு ஹைட்ரோகுளோரோகுயின் உடன் அசித்ரோமைசின் ஆன்ட்டிபயாடிக் இணைந்து வழங்கப்பட்டது. இந்த காம்பினேசனை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வில், 30 சதவீத நோயாளிகளுக்கு ஈசிஜி பரிசோதனையின்போது வெப்ப மாறுபாடு சாதாரண நிலையை விட அதிகரித்தது. 11 சதவீத பேருக்கு, அரித்மியா குறைபாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை உலகளவில் 2.1 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்து 146,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்ற ஒரு நாவல் நோய்க்கிருமிக்கு எதிரான தீர்வுகளுக்காக சுகாதாரப் பாதுகாப்பு அதிகாரிகளின் விரக்தியையும் பெருகிவரும் அழுத்தத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தியாவின் நிதி மூலதனம் மும்பை ஆசியாவின் மிகவும் நெரிசலான சேரி உள்ளிட்ட அண்டை நாடுகளில் நிரூபிக்கப்படாத, ஆனால் மிகவும் பிரபலமான ஆண்டிமலேரியல் மருந்தை நிர்வகிக்கும் திட்டத்தை சிறப்பாக வடிவமைத்து வருகிறது, இது கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான முதல் வகையான வெகுஜன பரிசோதனையாகும்.

கிரேட்டர் மும்பை மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் சுரேஷ் கக்கானி கூறுகையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பெறும் இலக்கு குழுவை நகர அதிகாரிகள் அடையாளம் காண்கின்றனர். அளவின் காலம் குறித்து மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெறப்பட்டு வருவதாகவும், ஓரிரு நாட்களில் ஒரு முடிவு எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.