வாஷிங்டன்

மெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்டரில் தம்மை விமர்சிப்பவர்களை பிளாக் செய்வதை நீதிமன்றம் தடை செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிகார பூர்வமான டிவிட்டர் கணக்குக்கு 6.18 கோடி பின்பற்றுவோர் உள்ளனர். அத்துடன் அவருடைய கருத்துக்களுக்கு பலர் கடுமையாக விமர்சனம் செய்வதும் உண்டு. இதனால் பல முறை எரிச்சல் அடைந்த டிரம்ப் தன்னை விமர்சிப்பவர்களை பிளாக் செய்து விடுவார். இதன் மூலம் அவர்களால் டிரம்பின் டிவிட்ட்டுகளை பார்க்கவோ அதற்கு கருத்து தெரிவிக்கவோ முடியாது.

இவ்வாறு தங்களை பிளாக் செய்வதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் ஏழு பேர் நீதிமன்றத்தில் தங்கள் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை மன்ஹாட்டன் நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கு நீதிபதி பாரிங்ட்ன் டி பார்கர் தலைமையிலான அமர்வின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வந்தது. வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பில், “ஒரு பொது அதிகாரியின் அதிகார பூர்வமான சமூக வலை தள பக்கத்தில் யாரும் அவரை விமர்சிக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட கணக்காக இருந்தால் மட்டுமே அவரால் தடை செய்ய முடியும். மற்றபடி அதிகார பூர்வ கணக்கு என்பது மக்களிடம் தனது கருத்தை தெரிவிக்கவும், அவர்கள் கருத்தை தெரிந்துக் கொள்ளவும் பயபடுவதாகும். இந்த கணக்கில் யாரையும் பிளாக் செய்யக் கூடாது.

இவ்வாறு செய்வது அரசியலமைப்பு சட்டத்தின்படி அளிக்கப்பட்டுள்ள கருத்துரிமையை தடை செய்யும் செயலாகும். பொது வாழ்வில் இருப்போர் இவ்வாறு விமர்சனங்களை கேட்க விரும்பாமல் தடை செய்வது சட்ட விரோதமாகும். மேலும் அர்சியலமைப்பு சட்டத்தை அது மீறும் செயலாகும். அமெரிக்க சட்டத்தின் படி ஆட்சி மற்றும் ஆள்வோர் குறித்து ஒளிவு மறைவற்ற தகவல் அளிக்க வேண்டும்.”: என தெரிவிக்கப்பட்டுள்ளது.