அமெரிக்காவின் சொந்த செலவில் எல்லை சுவர்!! டிரம்ப் வாக்குறுதி அம்பேல்

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முக்கிய திட்டங்களில் ஒன்றாக இருப்பது எல்லை சுவர் கட்டுவதாகும். இந்த திட்டத்திற்கு மெக்சிகோ தான் செலவை ஏற்க வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் அறிவித்தார். ஆனால் தற்போது இந்த சுவர் கட்ட பட்ஜெட்டில் 4.1 பில்லியன் டாலரை டிரம்ப் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்த ஆண்டிற்கு 1.5 பில்லியன் டாலரும், அடுத்த ஆண்டிற்கு 2.6 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்ய டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் சுவர் அமைப்பதற்கான செலவு அமெரிக்கர்களின் வரி பணத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. மெக்சிகோ மூலம் செலவு மேற்கொள்ளப்படவில்லை என்பது தெளிவாகிவிட்டது.

முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது தேர்தல் வாக்குறுதியில் இருந்து பின் வாங்கும் வகையில், எல்லை சுவரை அமெரிக்கா செலவு செய்து கட்டிவிட்டு, பின்னர் மெக்சிகோவிடம் இருந்து திரும்ப பெறப்படும் என்று அறிவித்திருந்தார்.

 

தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் அறிவித்த மதிப்பீட்டு தொகையை விட பல மடங்கு அதிகமாக இதற்கு செலவாகும் என்று உள்ளூர் நில பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இந்த சுவர் கட்ட 12 பில்லியன் டாலர் செலவாகும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் தற்போது 21.6 பில்லியன் டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதை கட்டி முடிக்க 3 ஆண்டுகள் ஆகும் என கணக்கிடப்ப்டடுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.