வாஷிங்டன்,

மெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20ந்தேதி பதவி ஏற்றுள்ளார். தொடர்ந்து  அதிரடியாக  ஒபாமா  மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து கையெழுத்திட்டுள்ளார்.

அதிபராக பதவி ஏற்றவுடன் தனது முதல் கையெழுத்தாக,  ஒபாமா  மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, அவரது ஆட்சியின்போது ஒபாமா மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்திருந்தார். ஆனால், புதிய அதிபர் டிரம்ப் அந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து, மாற்றுத் திட்டத்தைக் கொண்டு வரும் உத்தரவில்  கையெழுத்திட்டுள்ளார்.

அதிபராகப் பதவியேற்றதும் டிரம்ப் கையெழுத்திட்ட முதல் உத்தரவு இதுவாகும். இதுகுறித்து அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,

தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்வதுதான் எனது அரசின் கொள்கையாகும். இந்தத் திட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நிதிச் சுமையை அகற்றும் விதத்தில் மாற்றுத் திட்டத்தை அறிமுகம் செய்வோம்.

புதிய திட்டம் அறிவிக்கும் வரையில் தற்போதுள்ள திட்டத்தால் மத்திய, மாநில அரசுகளுக்கும் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் களையும் விதத்தில் நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப் படும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு அமைச்சர்களை நியமிக்கும் உத்தரவிலும் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.