நியூயார்க்

திபர் டிரம்ப் உத்தரவுப்படி வெள்ளி மாளிகையில் இருந்து அனைத்து ஊடகங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் அதிபர் டிரம்பை விட அவருடைய எதிர் வேட்பாளர் ஜோ பைடன் முன்னணியில் உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.  முதலில் டிரம்ப் அதிக இடங்களைப் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.  ஆனால் மற்ற பகுதிகள் முடிவுகள்  வரும் போது அவருடைய வெற்றி எண்ணிக்கை குறைந்து வந்தது.

இது குறித்து டிரம்ப் தனது வெற்றியை ஊடகங்கள் திருடி தவறான செய்திகள் வெளியிடுவதாகக் கோபமாகக் குற்றம் சாட்டினார்.    இதற்கு ஊடகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.  அவர் தேவை இல்லாமல் கோபம் அடைவதாகத் தெரிவித்த ஊடகங்கள் தேர்தலுக்கு முன் தினம் இரவு அவருடைய நள்ளிரவு உரையை முழுமையாக ஊடகங்கள் ஒளிபரப்பியதைச் சுட்டிக்காட்டின.

மேலும் ஊடகங்களில் டிரம்ப் தெரிவித்ததை போல் எவ்வித கள்ள வாக்குகளும் பதிவாகவில்லை எனச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் இருந்து அனைத்து ஊடகங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.   இந்த ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியிடுவதாக டிரம்ப் ஊடகங்களைத் துண்டிக்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

என் பி சி, சிபிஎஸ்,, எம் எஸ் என் பி சி உள்ளிட்ட அனைத்து ஊடகங்களும் டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  தங்களுக்கு அமெரிக்க அதிபர் தவறு செய்யும் போது அவற்றைச் சுட்டிக் காட்டவும் திருத்தவும் உரிமை உள்ளதாகத் தெரிவித்துள்ளன.