நியூயார்க் டைம்ஸை கடுமையாக விமர்சித்த டிரம்ப்

அமெரிக்காவில் பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸை அந்நாட்டு அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். நேற்று டிரம்பை கடுமையாக விமர்சித்து நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்ட நிலையில் டிரம்ப் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

TRUMP

அமெரிக்காவின் பிரபலமான பத்திரிகைகளில் ஒன்றான நியூயார்க் டைம்ஸ் தனது தலையங்கத்தில் புதன்கிழமை அதிபர் டொனால்ட் டிரம்பை கடுமையாக விமர்சித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில், “ அதிபர் டிரம்ப் நடவடிக்கைகள் நெறியற்றதாகவும், தொலைநோக்கி பார்வையில் இல்லாததாலும் பல பொறுப்பற்ற முடிவுகளுக்கு வழிவகுக்கின்றன “ என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கட்டுரையை எழுதிய ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படாமல், இதை எழுதியது டிர்ம்ப் நிர்வாகத்தை சேர்ந்தவர் என்று எழுதியிருந்தது.

இதையடுத்து, அந்த பத்திரிகைக்கு எதிராக டிரம்ப் ஆதரவாளர்களும், குடியரசு கட்சியை சேர்ந்தவர்களும் விமர்சனங்களை முன்வைத்தனர். இது தொடர்பாக டிரம்பும் தனது பங்கிற்கு அந்த தலையங்கத்துக்கு பதிலடி கொடுத்து விமர்சித்துள்ளார். இது குறித்து டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், “ உண்மையில் அந்த மூத்த அதிகாரி இருக்கிறாரா ? அல்லது இதுவும் அந்த பத்திரிகையில் போலித்தனமான ஆதாரங்களை மற்றுமொரு தோல்வியா ? ஒருவேளை இந்த கட்டுரையை எழுதியவருக்கு தைரியம் இல்லையெனில், அவர் தனது பதவியில் இருந்து விலகவேண்டும் “ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பாக அமெரிக்காவின் புலனாய்வு துறை பத்திரிகையாளரான பாப் வுட்வார்ட் ‘fear: Trump in the White House’ என்ற புத்தகத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை கடந்த வருடம் கொலை செய்ய திட்டமிட்டார் என்றும் அதனை அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் தடுத்து விட்டார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சர்ச்சை மிகுந்த தகவலை தொடர்ந்து அடுத்த நாள் நியூயார்க் டைம்ஸ் டிரம்பை விமர்சித்து கட்டுரையை வெளியிட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-