வாஷிங்டன்

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கக் கோரிய தீர்மானத்துக்குப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்கு அளித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ள டிரம்ப் இதற்கான பிரச்சாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டார்.   அவர் தனது வெற்றிக்கு உதவ உக்ரைன் நாட்டு அரசிடம் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் மீது நடவடிக்கை எடுத்து உதவி செய்யுமாறு கேட்டதாகத் தகவல் வெளியானது.

ஆனால் தம் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று டொனால்டு டிரம்ப் தொடர்ச்சியாக கூறி வருகிறார்.  அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்கக்கோரி பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் தாக்கல் செய்த தீர்மானம் மீது நேற்று விவாதம் நடைபெற்றதையடுத்து வாக்கெடுப்பு நடந்தது.

இந்த வாக்கெடுப்பில் 196 உறுப்பினர்கள் டொனால்டு டிரம்பிற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.   இதையொட்டி டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை வேகமெடுத்துள்ளது. டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பலம் இல்லாதது அவருக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.