அமெரிக்க கொடியை தவறாக வரைந்த அதிபர் : சர்ச்சையில் டிரம்ப்

வாஷிங்டன்

திபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க தேசியக் கொடியை தவறாக வரைந்தது  சமூக வலை தளங்களில் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள ஓசியோ மாநிலத்தில் கொலம்பஸ் நகரில் ஒரு குழந்தைகள் மருத்துவ மனை உள்ளது.  அங்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் சென்று அங்கிருந்த குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.    அவர்களுடன் தாமும் ஒரு குழந்தையாக மாறிய டிரம்ப் அந்நாட்டின் தேசியக் கொடியை வரைந்து வண்ணம் தீட்டி உள்ளார்.

அமெரிக்க நாட்டு தேசியக் கொடியில் 7 சிகப்பு மற்றும் ஆறு வெள்ளை கோடுகள் இடம் பெற்றிருக்கும்.  அந்தக் கொடியின் இடது ஓரத்தில் நீல கட்டத்தில் 50 நட்சத்திரங்கள் இருக்கும்.    இந்த கொடிக்கு வண்ணம் தீட்டும் போது டிரம்ப் தவறு செய்துள்ளார்.

சிகப்பு நிறத்தின் கீழ் வெள்ளைக்கு பதில் நீல நிறத்தை டிரம்ப் தீட்டி உள்ளார்.  இந்த புகைப்படம்  சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.  அமெரிக்க அதிபரே அந்நாட்டு தேசியக் கொடியை தவறாக வரைந்தது ஒட்டி சமூக வலை தளங்களில் சர்ச்சை ஏற்பட்டுளது.   பல நெட்டிசன்கள் டிரம்ப்பை கிண்டல் செய்து வருகின்றனர்.

You may have missed