டிரம்ப்பை அகற்றுங்கள், அமெரிக்காவை காப்பாற்றுங்கள்: இந்திய, அமெரிக்க தம்பதிகள் டிஜிட்டல் பிரச்சாரம்

வாஷிங்டன்: டிரம்ப்பை அகற்றுங்கள், அமெரிக்காவை காப்பாற்றுங்கள் என்று பிடனுக்கு ஆதரவாக இந்திய-அமெரிக்க தம்பதிகள் டிஜிட்டல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.

சிலிக்கான் வேலியை சேர்ந்த இந்திய-அமெரிக்க தம்பதியினரான அஜய் மற்றும் வினிதா பூட்டோரியா இந்தியில் டிஜிட்டல் கிராபிக்ஸ் பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளனர். ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு ஆதரவளித்து வாக்களிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

டிரம்ப்பை அகற்றுங்கள், அமெரிக்காவை காப்பாற்றுங்கள் என்று தலைப்பில் 14 இந்திய மொழிகளில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது என்று இந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர். இந்திய-அமெரிக்கர்கள் தேர்தல் முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய மாநிலங்களில் பிரச்சாரத்தின் கவனம் அதிகமாக இருக்கும் என்று பூட்டோரியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்திய அமெரிக்க வாக்குகள் தான் இந்த தேர்தலில் வெற்றியின் காரணிகளாக இருக்கும் என்றும் அவர் கூறி உள்ளார். பிடனுக்கு 1.3 மில்லியன் இந்தோ அமெரிக்க வாக்குகளை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.