டிரம்ப் மீது விசாரணை: செனட் சபை உறுப்பினர்கள் 100 பேரும் ஜுரிகளாக பதவிப்பிரமாணம்

--

வாஷிங்டன்:

மெரிக்க அதிபர் டிரம்ப் மீது விசாரணை நடத்தும் வகையில்,  அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை உறுப்பினர்கள் 100 பேரும் ஜுரிகளாக பதவிப்பிரமாணம் எடுத்தள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அவரை எதிர்த்து போட்டியிடும்  வேட்பாளர் ஜோ பிடனின் செல்வாக்கை முறியடிக்கும் வகையில், உக்ரைனில் தொழில் செய்து வரும் அவரது மகன்மீது விசாரணை நடத்த உத்தரவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, டிரம்ப் பதவி நீக்கத் தீர்மானம் எதிர்க்கட்சியினர் அதிகம் உள்ள செனட் சபையில்  நிறைவேற்றப் பட்டது.  இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில்  189 வாக்குகள் தீர்மானத்துக்கு ஆதரவாகக் கிடைத்துள்ளன.  இது டிரம்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இருந்தாலும் செனட் சபையில் டிரம்ப் கட்சியனர் அதிகமான உள்ளதால், டிரம்பின் பதவிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்ற கூறப்படுகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, பிரதிநிதிகள் சபையைவிட செனட் சபைதான் அதிக வலிமையானது. இங்கு  மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்களும், முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 47 உறுப்பினர்களும் உள்ளனர்.

டிரம்ப்பின் பதவியை முடக்க  வேண்டுமானால் இந்த அவையில் 66 வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாக தேவை. இந்த நிலையில், டிரம்ப் மீதான குற்ற விசாரணைக்கு செனட் சபை உறுப்பினர்கள் 100 பேரும் ஜுரிகளாக பதவிப்பிரமாணம். அமெரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோன் ரொபர்ட்ஸ் முன்னிலையில் ‘பக்கச்சார்பற்ற முறையில் நீதி வழங்குவோம்’ என செனட் சபை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஜுரிகளாக பதவியேற்றுக் கொண்ட செனட் சபை உறுப்பினர்களினால் எதிர்வரும் வாரங்களில் தீர்மானிக்கப்படவுள்ளது.

அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். அவரை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஜோ பிடன் போட்டிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், ஜோ பிடனின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவரும், அவரது மகனும் உக்ரைனில் செய்து வரும் தொழில் தொடர்பாக அவர்கள் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டுமென்று அந்நாட்டு அரசாங்கதிற்கு ட்ரம்ப் நெருக்கடி கொடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.