இந்தியா என்றால் என்ன? இந்தியா எங்கே? கூகுளில் தேடிய அமெரிக்கர்கள்

வாஷிங்டன்: டிரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில், இந்தியா எங்கே, இந்தியா என்றால் என்ன, அமெரிக்கர்கள் இணையத்தில் தேடி உள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல்முறையாக தமது இந்திய பயணத்தில் இருக்கிறார். இந்த 2 நாட்களிலும் அவர் பல முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருக்கிறார். அவரின் 2 நாள் உலக அளவில் கவனிக்கப்பட்ட அதே வேளையில் அமெரிக்கர்களோ… இந்தியா என்றால் என்ன? இந்தியா எங்கே என்று கூகுளில் தேடியிருப்பது தான் சுவாரசியம்.

முக்கியமாக இந்தியா எங்கே என்ற தரவு அதிகளவு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. நியூ ஜெர்சி, இண்டியானா என பகுதிகளில் இதன் தேடல் அதிகமாகி இருந்திருக்கிறது.

அனைவருக்கும் மிக ஆச்சரியமான விஷயம் உற்றுபார்க்கப்பட்டிருக்கிறது. இந்தியா எங்கே என்ற தேடல் ஒரு பக்கம் இருக்க… இந்தியா என்றால் என்ன? என்ற தரவுகளும் கூகுளில் பதிவிடப்பட்டிருக்கின்றன.

இந்தியா என்றால் என்ன என்பதை இண்டியானா, நியூ ஜெர்சி ஆகிய மாநிலங்களில் தான் அதிகம் பேர் தேடி இருக்கின்றனர்.